வாயில் பலத்த காயமடைந்த மக்னா யானை நீண்ட காலம் உயிர் வாழாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இது விலங்கு நல ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியது.

கோவை அருகே மருதமலை வன பகுதியில் வாயில் காயம் ஏற்பட்ட ஒரு மக்னா யானை முதன்முதலில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மருதமலை பகுதியில் வனப் பணியாளர்களால் கவனிக்கப்பட்டது. உடனே அதை வன கால்நடை அதிகாரி, டாக்டர் சுகுமார் பரிசோதித்தார். வாய் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு மக்னா யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
கடந்த மாதம் 17-ஆம் தேதி அன்று, யானை கேரள வனப்பகுதிக்குள் நுழைந்தது. யானைக்கு வாயில் ஏற்பட்ட காயம் குறித்து கேரள வனத்துறையுடன் தகவல் பகிரப்பட்டது. பின்னர் கேரள வனத்துறை ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி அன்று யானைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து யானை ஆகஸ்ட் 27-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள போலவம்பட்டி வரம்பில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நுழைந்தது. கோவை வன வனக்கோட்ட பணியாளர்கள் அன்றிலிருந்து தொடர்ந்து யானையினை கண்காணித்து வருகின்றனர். ஆரம்ப நாளில் யானை உண்பதற்க்கு வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் சத்து மாவுகளுக்கு பலனளித்தது.
இந்த யானை கேரளாவை நோக்கி அதன் வழக்கமான நகர்வு பாதையை பின்பற்றியது. ஆனால் இப்போது மிகவும் மெதுவாகவும் மிகவும் நோயுற்றதாகவும் மாறிவிட்டது. வன கால்நடை மருத்துவர்கள், யானை சில நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. ஏனென்றால் அதன் நாக்கு முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருப்பதால் எந்தவொரு சிகிச்சையும் சாத்தியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நாக்கு அறுபட்ட நிலையில் உணவு ஏதும் உட்கொள்ள வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என தமிழக வனத்துறை மருத்துவர்களாலும் தகவல் செய்யப்பட்டுள்ளது. யானையை மருந்து செலுத்திப் பிடித்தால் யானை இறக்க வாய்ப்புள்ளது.
அப்படியே மருந்து செலுத்தி பிடித்தாலும் அதன் வாய்ப்பகுதி முழுவதாக சேதமடைந்துள்ளதால் எந்த உணவையும் உட்கொள்ள இயலாது. எனவே கேரள வனத்துறையும் மருந்து செலுத்து அதனைப் சிகிச்சை செய்ய முயற்சிக்கும் போது சிகிச்சைக்கான எந்த வாய்ப்பும் இல்லை என மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டது. இதனால் விலங்கு நல ஆர்வலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.




