தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்குகிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

மம்முட்டியின், மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டது குறிப்பிடத்தக்கது.
வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி இணைந்துள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.




