கொரோனா நோயின் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போய் உள்ளது, இந்தியாவில் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது அதே போல் மாத மாதம் சில தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் பொது போக்குவரத்திற்கு அரசு அனுமதி அளித்தது, கடந்த 1ஆம் தேதியில் இருந்து பஸ்கள் ஓட தொடங்கின, அடுத்த கட்டமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதையொட்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், சோதனை ஓட்டம் சென்ற மெட்ரோ ரயிலில் சிறிது தூரம் பயணம் செய்து, பயணிகளுக்கான வசதிகள், சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செய்ய பட்டு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.