கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற விபத்தில், விமானம் இரண்டாக உடைந்ததில் விமானிகள் இருவர் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர்களுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
கோவிட்-19 நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.