கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள இயற்கையான முறையில் கிருமி நாசினிகள் தயாரிக்கலாம். செலவும் மிகக் குறைவு, ரசாயனங்கள் பாதிப்பும் இல்லை.
கொரோனா நோய் இருந்துவரும் இச்சமயத்தில் கிருமிகள் தாக்காமல் இருக்க நம்மைக் கத்துக்க கொள்ள வேண்டியது அவசியம். எனினும், மிக அதிக விலைக்கு விற்கும் ரசாயனம் மிக்க சானிடைசர் வாங்கினால், நம் கையில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இவற்றை சரிசெய்ய இயற்கையாக கிடைக்கும் பொருட்களை உபயோகித்து வீட்டில் உள்ளோரை கிருமிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
மஞ்சள்
மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடல் உள்ளுக்கு எடுக்கும் போது இவை தொற்றை அழிப்பதோடு உடலுக்கு எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
ஒரு தம்ளர் நீருக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் மஞ்சள்தூளை கலந்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துவிடுங்கள். கைகளை சோப்பு போட்டு கழுவினாலும் பிறகு இந்த மஞ்சள் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் 30 விநாடிகள் வைத்திருந்து அல்லது அந்த நீரில் கைகளை நன்றாக கழுவி விடுங்கள். வீட்டிற்குள்ளும் கூட இந்த நீரை தெளிக்கலாம். பூச்சிகளும் வராமல் இருக்கும்.
படிகாரம்
சித்தர்கள் காலம் முதல் இது மருத்துவசிகிச்சையிலும் பயன்படுத்தபடும் ஒரு பொருள். உப்பு படிமம் தான் இந்த படிகாரம்.
படிகாரத்தூளை நீரில் கலந்து வைத்து கைகளை கழுவி கொள்ளலாம். படிகாரத்தூளுடன் கற்றாழை சாறு கலந்து குழைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு விடலாம். இதை கைகளில் தடவி கொள்ளலாம்.
திருநீற்றுபச்சிலை
திருநீற்றுபச்சிலை மூலிகை குணமிக்க பொருள். இதை உள்ளுக்குள் எடுத்துகொள்வதன் மூலம் பல நோய்கள் குணப்படுத்தப்படும். சானிடைசர் பயன்படுத்தும் போது அதன் நறுமணத்தை உணர்பவர்கள் இந்த திருநீற்றுபச்சிலையை பயன்படுத்தும் போதும் உணர்வார்கள். நறுமணமிக்கது இந்த இலை. இவை வேலி ஓரங்களில் வயல் ஓரத்தில் சாதாரணமாக காணப்படும்.
இந்த திருநீற்று பச்சிலை இலையை அரைத்து சம அளவு கற்றாழை சாறு கலந்து பயன்படுத்தலாம். வைரஸ் தொற்றை நீக்கும் மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் திருநீற்றுபச்சிலையை கீரை விற்பவர்களிடம் வாங்கியும் பயன்படுத்தலாம்.