பிரபல மலையாள ஜோடியான ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நாஜிம் ஆகியோர் புத்தம் புதிய ஆடம்பரமான போர்ஷே காரை வாங்கியுள்ளனர்.
ஜெர்மன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்ஷின் 911 கரேராவின் மாடல் பச்சை நிற கார் விலை சுமார் 1.90 கோடி ரூபாய்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபஹத் தனது காரின் புகைப்படத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமாகி வருகின்றன.
ஃபஹத் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியான ‘சி யு சூன்’ படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைவராலும் பாராட்டப் பட்டது.
சிரமங்களை எதிர்கொண்ட FEFKA (கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம்) தொழிலாளர்களுக்கு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஃபஹத் ரூ .10 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.