Neet தேர்வு பயத்தால் மன உளைச்சலுக்கு ஆளான, மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் மருத்துவ படிப்பிற்கான neet நுழைவு தேர்வு நாளை நடக்கிறது, அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வருகின்றன, neet தேர்வு பயத்தில் கடந்த வாரம் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ஸ்ரீ துர்கா(19). இவரது தந்தை முருகசுந்தரம் காவல்துறையில் உதவி ஆய்வாளராக உள்ளார்.இவர்கள் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்தனர். ஜோதி ஸ்ரீ துர்கா, Neet தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.
இந்நிலையில் நாளை(செப்.,13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




