மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்காக ‘Neet’ மற்றும் ‘JEE.’ தேர்வுகளை நடத்த அனுமதித்து கடந்த மாதம் 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதன்படி ‘Neet’ தேர்வு வரும் 13-ந்தேதி நடக்கிறது. ‘JEE.’ தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 6-ந்தேதி முடிகிறது. இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களான மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஷ்கார், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 6 மாநிலங்களின் மந்திரிகள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், “கொரோனா காலத்தில் மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பாதுகாக்க தவறி விட்டது என்றும் தேர்வுகளை நடத்துவதில் உள்ள சிக்கல்களை புறக்கணித்து விட்டது என கூறப்பட்டுள்ளது.

இந்த மறு ஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது. வழக்கம்போலவே இந்த மறு ஆய்வு மனுவும் நீதிபதிகள் அறையிலேயே விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அப்போது இந்த மறு ஆய்வு மனு, திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க தகுதியானதுதானா என நீதிபதிகள் அறையிலேயே முடிவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




