புதிய கல்விக் கொள்கையை மாணவர்கள், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், மாணவர்கள் விரும்புகிற கல்வியை இந்த புதிய கல்விக் கொள்கை கற்றுத்தரும் என்றும் மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த கல்விக் கொள்கையானது மும்மொழித் திணிப்பு, குலக்கல்வி உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்த ஆளுநர் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றுகையில், “மாணவர்கள் விரும்புகிற கல்வி முறையை கற்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையானது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை, ஆசிரியர்கள் மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், மக்களும் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.