சென்னை: அந்தமான் கடல்பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதியிலும் இன்று 60 கி.மீ.வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வடக்கு அந்தமான், மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு உள்ளது.
இதேபோல், தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. திருவள்ளூர் எண்ணூர் துறைமுகத்திலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.