பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் “கார்பெவாக்ஸ்” தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் அவசரகால ஒப்புதல் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, இந்தியாவில் கொரோனா பெருந்தோற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிட்சீல்ட்,ஸ்புட்னிக் வி,மார்டெர்னா,ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு இம்மாத இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான பயோலாஜிக்கல்-இ தயாரிப்பில் உருவாகியுள்ள “கார்பெவாக்ஸ்” தடுப்பூசியின் 3ம் கட்ட சோதனை முடிவடைந்துள்ள நிலையில் அவசரகால ஒப்புதல் கோரி இந்திய மருந்து கட்டுபாட்டாளர் ஆணையத்திடம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் இதே நிறுவனம் அவர்களின் “கார்பெவாக்ஸ்” தடுப்பூசியை கோவாக்சின் மற்றும் கோவிட்சீல்ட் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக பயன்படுத்த சோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தில் இருந்து 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை பெற முன்பணமாக மத்திய பயாலாஜிக்கல் இ நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு பிறகு இது இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.