நிவர் புயல் வர்தாவைப் போல வறண்ட புயல் அல்ல. முழுவதும் நீரை நிரப்பிக் கொண்டு வரும் கனமழைப் புயல். நிவர் புயலின் பாதையை கணித்தால், புயல் கடந்த பின்னும் மழை நீடிக்கும் என்று தெரிகிறது. வர்தா நேர் கோட்டில் சென்ற புயல். நிவர் கிட்டத்தட்ட செங்குத்தாக செல்லும். எனவே மழை நீண்ட நேரம் நீடிக்கும். இடைவிடாமல் மழை பெய்யும்.
அச்சுறுத்துவதற்காகவோ, பயமுறுத்துவதற்காகவோ, இவற்றைச் சொல்லவில்லை. கடைசி நேரத்தில் புயல் கலைய வேண்டும் என்றும், இந்த கணிப்புகள் தவறாக போக வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனாலும் எச்சரிக்கை மக்களே!
- கதவுகளை இறுக்கமாக பூட்டி வையுங்கள்.
- எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.
- அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் கவனமாக இருங்கள்.
- மழையும், காற்றும் சுழன்றடிக்கும் போது, மரங்களின் கீழ் நிற்க வேண்டாம்.
- சென்னையில் இருக்கும் எந்த மரமும் வேர்ப்பிடிப்பு கொண்டவை அல்ல.
- வாகனங்களை மரங்களுக்கு அடியில் நிறுத்தாதீர்கள்…
- மின்சாரம் தடைபடும். எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.