உத்தரப்பிரதேசத்தில் 340 கி.மீ., நீளத்தில் அமையவுள்ள ‘புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வே’ திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று காசிப்பூரில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்றார். நிகழ்வுக்கு பிறகு, மக்கள் மத்தியில் பேசிய யோகி,
உத்தரப்பிரதேசத்தில் மாபியாக்களுக்கும் கிரிமினல்களுக்கும் இடமில்லை என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்
“நெடுங்கலாமாக புர்வாஞ்சல் பகுதி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மாபியா கலாச்சாரத்தினை முற்றாலுமாக ஒழிக்கும் முயற்சியில் நமது அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. முந்தைய அரசாங்கங்கள் மாபியா கலாச்சாரம் மற்றும் கிரிமினல்களை வளர்த்தெடுத்து வந்த காரணத்தினால்தான், மாநிலம் வளர்ச்சியடைவது பெருமளவு தடைபட்டது மக்களுக்கும் அது பல வகையில்பாதிப்பை ஏற்படுத்தியது.
புதிய உத்தரப்பிரதேசத்தில் மாபியா கும்பல்கள், கிரிமினல்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு இடமில்லை. கிராமங்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வளர்ச்சி ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேநேரத்தில், புர்வாஞ்சல் பகுதியின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மாபியா கலாச்சாரத்தினை ஒழிப்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்றார்.
சமீபகாலமாக உத்தரப்பிரதேச மாநில அரசு மாபியா கும்பல்களுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு விதமான நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னராக, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நேற்று ஒரு நாள் பயணமாக அயோத்திக்கு சென்று, அங்கு ராமர் கதை அருங்காட்சியகத்தில், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின் பேசிய அவர், “உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சர்வதேச சுற்றுலா பயணிகளும் அயோத்திக்கு வர ஆர்வமாக உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுங்கள். அதற்கு இப்போது நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துங்கள். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள் என கூறினார்.
நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை உரிய காலத்துக்குள் செய்யுங்கள். புதிய உள்கட்டமைப்புகள் குறித்து விளக்குவதற்கு சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஹரித்துவாரில் ஹரி படித்துறை இருப்பதுபோல், இங்கு ராமர் படித்துறை உருவாக்க வேண்டும். சரயு நதியில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட வேண்டும். சரயு ஆற்றின் தூய்மைகுறையவன்னம் கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து பாசன வசதிக்கு பயன்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும். அனைத்து படித்துறைகளிலும் விளக்கு வசதி இருக்க வேண்டும். பசுமை பகுதிகளில் மூலிகை தாவரங்கள் நடப்பட வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய வசதிகளை உருவாக்க வேண்டும். முக்கியமான இடங்களில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக. உள்ளூர் மக்களுக்கு எந்த இடையூறும் நேராமல் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். சாலை அகலப்படுத்தியதால் அப்புறப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் பேசி, அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், அயோத்தியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். விமான நிலையம், பஸ் நிலையம் மற்றும் ரெயில்வே தொடர்பான பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.