கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு அவரது பழைய நண்பர்கள் புதிதாக வீடு கட்டிக் கொடுத்தனர்.

கஜாபுயலால் புதுக்கோட்டையில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் மச்சுவாடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் என்பவரின் வீடும் சேதமடைந்தது. கொரோன போது வெளியூரில் வாசித்த அவரது நண்பர்கள் புதுக்கோட்டைக்கு வந்திருந்தனர். அப்போது சேதமடைந்த அவரது வீட்டை பார்த்துள்ளனர்.
அப்போது தன் நண்பனுக்கு புதிய வீட்டை கட்டி கொடுக்க வாட்ஸாப் குரூப் ஒன்று ஆரமித்து அதில் இதற்கான முயற்சி செய்துள்ளனர். மற்ற இடங்களில் இருக்கும் அணைத்து நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து, அனைவரும் உதவிக்கரம் நீட்டவே அவரின் வீட்டை மீண்டும் புதியது போல மாற்றி கொடுத்தனர்.

அந்த புதிய வீட்டை நண்பர்கள் திறந்து வைத்து அதன் சாவியை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா ஊரடங்கில் பழைய நண்பரை சந்தித்ததிலும், புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ்-அப் குழுவாலும் ஆட்டோ டிரைவருக்கு விடிவு பிறந்ததை எண்ணி அவரது நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




