இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,தற்போது 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில்,அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேருக்கும்,டெல்லியில் 165 பேருக்கும்,கேரளாவில் 57 பேருக்கும்,தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக,ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 653 நபர்களில்,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,467 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.