சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது மீண்டும் கொரோனா தொற்று தமிழகத்தில் பரவுவதற்காக அறிகுறியா என அச்சம் எழுந்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 17-ந்தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி டாக்டர்கள், நர்சிங் மாணவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் என கடந்த 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 68 பயிற்சி டாக்டர்கள், 227 நர்சிங் மாணவிகள், 60 துப்புரவு பணியாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 60 பேரில் 7 பயிற்சி டாக்டர்கள், 7 நர்சிங் மாணவர்கள், 3 நர்சுகள், 1 முதுகலை மருத்துவ படிப்பு மாணவர், 1 துப்புரவு பணியாளர்கள், அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் என மொத்தம் 42 பேருக்கு
ஒமைக்ரான் அறிகுறி (எஸ் ஜீன்) தென்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே மற்றும் ஐதரபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிராக செயல்படும் கருவியாக தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன.