டெல்லியில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 24 ஆக உயர்வு.
டெல்லி,
இந்தியாவில் சமீப நாட்களாக ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பில் 24 பேருடன் தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று டெல்லியில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 24 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 24 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 12 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் லோக் நாயக் மருத்துவமனை உட்பட 5 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 155 ஆக உயர்ந்துள்ளது.