இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார்.
நாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் முறையாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பண்டிகைகள் வர இருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.