ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்வு;இதுவரை 104 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்.
டெல்லி,
சர்வதேச பயணிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை கண்காணித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேல்பகுபாய்வுக்காக அனுப்பப்படுகிறது; இதில் நாட்டில் இதுவரை 16 மாநிலங்களை சேர்ந்த 236 பேருக்கு ஓமிக்கிரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 104 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேருக்கும்,டெல்லியில் 64 பேருக்கும்,தெலங்கானா மாநிலத்தில் 24 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 21 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, கர்நாடகா 19, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு & காஷ்மீர் 3 , ஆந்திரா,ஒடிசா,உத்திரபிரதேச மாநிலத்தில் தலா 2 பேர் மற்றும் சண்டிகர்,லடாக்,தமிழ்நாடு,உத்தரகண்ட்,மேற்குவங்கம் மாநிலத்தில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த பாதிப்பு 236 என மத்திய சுகாதார அமைச்சகம் தரவுகள் வெளியிட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட நைஜீரிய பயணியின் தொடர்ப்பில் இருந்த 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 269 ஆக உயர்ந்துள்ளது.