நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு வழிநெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன.
வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.இதனால் இதனை நம்பி இருந்த பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தமிழக அரசு சில வழிகாட்டுதலின்படி பொது பூங்காக்களை திறக்க அனுமதிஅளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர், அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு வழிநெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.
அதன்படி சுற்றுலா பயணிகள் கீழ் வரும் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது; வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.