டெல்லியில் இன்று 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது; தமிழகத்தில் இருந்து மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருதும், பத்ம ஸ்ரீ விருது 10 பேருக்கும் வழங்கப்பட்டது.
இதில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபல கர்நாடகா இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பத்ம ஸ்ரீ விருது பெற்ற தருணம் ஒரு மகிழ்ச்சியான தருணம் என குறிப்பிட்ட அவர், மத்திய அரசு எனக்கு இவ்விருதை வழங்கி கவுரவித்து உள்ளது.
இதற்காக என் குரு ( லால்குடி ஜெயராமன்) ,பெற்றோர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். எந்த விருதுகள் எப்போது கிடைக்குமோ அப்போது கிடைக்கும் எனவும், விருது என்பது “பூ” -வை போல,பூ வருவதில் என்ன காலதாமதம் என தெரிவித்தார்.
பிரீத் :
பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்,
கர்நாடக இசை பாடகி. ( பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் )
இவர், தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கஜினி திரைப்படத்தில் “சுட்டும் விழி”, காக்க காக்க திரைப்படத்தின் “ஒன்றா இரண்டா”,தாம் தூம் படத்தில் “யாரோ மனதிலே” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.