ரா. பார்த்திபனின் ‘’ஒத்த செருப்பு’’, ’’ஹவுஸ் ஓனர்’’ ஆகிய தமிழ் படங்களுக்கு மத்திய அரசு இன்று விருது அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் புதிய பாதை என்ற சினிமா மூலம் புதிய பாதையைத் திறந்துவிட்டு இன்றும் பல இளம் இயக்குநர்களுக்கு சவால் விட்டுக்கொண்டுள்ளவர் ரா. பாத்திபன்.
இவரது ஒத்த செருப்பு படம் கடந்த ஆண்டு வெளியானது. பல விருதுகளுக்கும் அனுப்பி வைத்தார். டிரோண்டாவில் நடந்த உலகத் தமிழ் திரைப்பட விழாவில் ஒத்த செருப்புக்கு 3 விருதுகல் கிடைத்தது. இப்படம் ரசிகர்களிடையே புதுமையாக முயற்சி என்ற பாராட்டைப் பெற்றது.
ஆனால் ஒரு பிரபல இதழ் இப்படத்திற்கு விருது கொடுக்காததால் அவர்களின் மேடையிலேயே ரா. பார்த்திபன் விமர்சித்தது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் இன்று மத்திய அரசு, ரா. பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு விருது அளித்துள்ளது.