இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுத்த ஊழியரை இரு பெண்கள் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறந்த குழந்தைகள் முதல் நாட்டை ஆளும் அதிபர்கள் வரை அனைவரும் நாள்தோறும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஒவ்வொருவரும் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுத்த ஊழியரை இரு பெண்கள் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள கிரேட்ட மான்செஸ்டர் என்ற பகுதியில் இரு பெண்கள் முகக்கவசம் தங்களின் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர்.
அப்போது முககவசம் அணியாமல் வந்த பெண்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுத்துள்ளார் ஊழியர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




