கார்லோஸ் வால்டெஸ் மற்றும் அவரது மனைவி உட்டாவின் ராய் நகரில் உள்ள பாப்பா ஜான்ஸ் பீட்ஸா என்ற இடத்தில் எப்போதும் பீட்ஸா வாங்குவார்கள். தங்கள் பீட்சாவில் அன்னாசிப்பழத்தை விரும்பிக் கேட்பதோடு, தங்களுக்கு பிடித்த 89 வயது டெலிவரிமேன் டெர்லின் நியூவே பைகளை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்வதும் வழக்கம்.
நியூவே மிகவும் வயதானவர், 89 வயதாகிறது அவருக்கு, ஆனாலும் அவரது நேர்மறையான அணுகுமுறையும் அவரது மகிழ்ச்சியான வார்த்தைகளும் அந்த தம்பதிக்கு மிகவும் பிடித்துப்போனது.
அவர்கள் நியூயியின் டெலிவரிகளை படமாக்கி, அவற்றை டிக்டாக் செயலியிலில் போட்டனர். விரைவில், அவர் அவர்களின் 53,000 பின்தொடர்பவர்களுடன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், நியூவியின் உற்சாகத்தை மக்கள் எவ்வளவு நேசிக்கிறார்களோ, அதேபோல் ஒரு வயதான மனிதர் இன்னும் பல மணிநேரங்களை வேலையில் செலவிடுகிறார் என்ற கவலையை அவர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்தின.
இதைக் கருத்தில் கொண்டு, அந்த தம்பதி தங்கள் ரசிகர்களை அணுக முடிவு செய்தனர்.
ஒரு டிக்டோக் சமூகமாக, நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம், இந்த அற்புதமான நபருக்காக கிட்டத்தட்ட 9 லட்சம் (12000 டாலர்) திரட்ட முடிந்தது, ”என்று வால்டெஸ் தெரிவித்தார்!
நியூவி-க்கு அவரது வீட்டில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வால்டெஸ் அந்த முதியவர் வீட்டிற்குச் சென்று வாசலில் ஒரு டி-ஷர்ட்டைக் காட்டினார், அதில் அந்த பணத்திற்கான காசோலை வைத்திருந்தார்.
முன்னாள் ஸ்கை சாம்பியனான நியூவி, கூடுதலாக வாரத்தில் 30 மணிநேரம் பணிபுரிந்து வந்தார், பல அந்நியர்களின் தாராள மனப்பான்மையால் உணர்ச்சிவசப்பட்டார். “நான் எப்படி நன்றி சொல்வது? என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று டெசரேட் நியூஸ் என்ற பத்திரிகையிடம் தெரிவித்தார்.
தன்னுடைய பங்கிற்கு, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்த ஒரு மனிதனுக்கு எதையாவது திருப்பித் தர முடிந்ததில் வால்டெஸ் மகிழ்ச்சியடைந்தார். “இது இன்னும் சிறப்பாக இருந்திருக்க முடியாது,” என்று வால்டெஸ் கூறினார்.
அவருக்கு இது தேவைப்பட்டது. நாங்கள் அவருக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. நாம் மக்களை அன்புடன் நடத்த வேண்டும், அவர் செய்யும் விதத்தை மதிக்க வேண்டும். அவர் எங்கள் இதயங்களைத் திருடிக்கொண்டார். ” என்று அந்த தம்பதி பெருமிதத்துடன் தெரிவித்தனர்.