தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
மே மாதம் என்றால் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதும், மாணவர்கள் அதன்பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் கல்வி நிலையங்களை நோக்கி படையெடுப்பதும் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா எல்லாவற்றையும் புரட்டிப் போட்டதுபோல் கல்வித் துறையிலும் புயலைக் கிளப்பியது. இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.