ப்ளஸ்-1, ப்ளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல், அக்டோபர் 14 முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 14 (புதன் கிழமை) முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்கள், தாங்கள் படித்தப் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். தலா 600 மதிப்பெண் அடிப்படையில் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும்.
மேலும், தேர்ச்சியடையாதவர்களுக்கு ப்ளஸ்-1, ப்ளஸ்-2 மதிப்பெண்ணை பதிவு செய்து, ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னர், தனித்தனி மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




