கொள்ளையனை விரட்டி சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியா ரௌடி.
தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகர காவல் எல்லையில் எந்தவித தவறுகளும் நடைபெறாமல் இருக்க ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 12 துணை கமிஷனர்களுக்கும் கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், குற்றப்பின்னணி உள்ள நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பழைய குற்றவாளிகளின் பட்டியலை எடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, எஸ்.ஐ. கார்த்திகேயன், முதல்நிலை காவலர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று கண்ணகி நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கண்மூடி முருகன், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை துரத்திய போது அவரை முருகன் அரிவாளால் வெட்டினான். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய கண்மூடி முருகனை கைது செய்தனர்.