புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இறுதியாண்டு தேர்வை, மாணவர்கள் திறந்த புத்தக தேர்வு(Open Book Examination) முறையைப் பின்பற்றித் தேர்வெழுத அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக தேர்வு ஆணையம்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் மாதம் நடக்க இருந்த புதுவைப் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பல ஆலோசனைகளுக்கு பிறகு அணைத்து பல்கலைக்கழகங்களும் முடிவு எடுத்து வருகின்றது.
புதுச்சேரி பல்கலைகழுகமும் தற்போது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த உள்ளது. அது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் யாதெனில் “மாணவர்களுக்கு நியாயமான தேர்வை உறுதி செய்யும் விதமாகப் புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் இரண்டும் கலந்த வகையில் மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி திறந்த புத்தக தேர்வு (Open Book Examination) முறையைப் பயன்படுத்தி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களின் தேர்வைப் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களைப் பார்த்துத் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த வழிமுறையில், கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் எழுதும் போது அவற்றைப் பதில்களைப் பார்த்து எழுதாமல், கேள்விக்கான பதிலைப் புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்வின் போது மாணவர்கள் அவர்களுடைய புத்தகம் மற்றும் குறிப்பேடுகளைப் பரிமாறாமல் இருப்பதைத் தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார் என்ற இந்த தகவலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.