மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை(NEP) மற்றும் ஊரடங்கு காலத்தில் மாநில அரசு கொண்டுவரும் ஆன்லைன் வகுப்பு பற்றி தி.மு. க. வை சேர்ந்த முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி காணொளிக்காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்.
*பல்வேறு மொழிகள், மதம், இனம் போன்ற வேறுபாடுகள் கொண்டுள்ள இந்திய நாட்டை, ஒற்றை தன்மையாக மாற்ற இந்த கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
*கடந்த ஆண்டு மத்திய அரசு புதிய கொள்கை மாதிரியை வெளியிட்டபோது, கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவை அமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியதாகவும் அந்த பரிந்துரைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்றார்.
*அனைத்து பல்கலைகழகங்களை நிர்வகிக்க பிரதமர் தலைமையிலான குழு எதற்கு? என கேள்வி எழுப்பினா். இதன் மூலம் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை பறிக்க மத்திய அரசு முயல்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
*அண்ணா காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை சிறப்பாக செயலில் இருக்கும் போது எதற்கு மக்களின் மீது இந்தி மற்றும் சமஸ்கிரதத்தை மத்திய அரசு திணிக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
*தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்காத நிலையில் பல மாணவர்கள் கிராமப்புரத்தில் இருப்பதால் அரசு எடுக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கு பங்கேற்பதில் அவர்களுக்கு சிரமமாக உள்ளது என கூறினார்.
மேலும் புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வர முயன்றால் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் ஒரு போராட்டத்தை தி. மு. க. நடத்தும் எனவும் எச்சரித்தார்.