வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) சார்பில் மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.
அதை முன்னிட்டு 24 ம் தேதி போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று (செப்.26) பிற்பகல் ரெயில் மறியல் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தை நீட்டிக்கும்படி விவசாயிகளும் விவசாய சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்தனர். இன்னும் மூன்று நாளுக்கு போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.
மேலும், அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.