தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ்-ன் அடுத்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராகவும், இயக்குநராகவும் இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளனர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவர் நடித்து இயக்கிய காஞ்சன் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமார் நடிக்க, ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி -2 படத்தில் லாரன்ஸ் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அப்படம் தாமதமாவதால், ஒரு புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் கதிரேசன் தயாரிப்பில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.




