காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தலைவரும் இந்திய பிரதமரும் ஆன மோடி அவர்கள் இன்று அவருடைய 70 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருக்கின்றது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல பிரபலங்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவர் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அதாவது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்கள் என்னதான் தன் பிரச்சாரத்தில் சண்டையிட்டு வந்தாலும் இன்று ராகுல் காந்தி மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது நம் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை காட்டுகிறது.