எத்தனை காலத்திற்க்கு அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் மறுக்கப்போகிறது? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சட்டி பதிவிட்டு வருகிறார்.
இன்று பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க சிலர் இன்றைய தினத்தை தேசிய வேலைவாய்ப்பின்மை தினமாக கருதி National Unemployment day என்று ட்வீட் பதிவிட்டு வருகிநின்றனர்.
இதை கவனித்த ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவில் நிலவி வரும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை காரணமாக நமது இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலைவாய்ப்பின்மை நாள் என்று அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது என கேள்வி எழுப்பியவாறு தந்து ட்விய்ட்டர்ல் பதிவிட்டுள்ளார்.
மேலும் இவரும் மோடியின் எழுதாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.