போலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது என நடிகை ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதனால் பாலிவுட் மிகவும் பரபரப்பாக நிறைய விஷயங்களை நடந்து வருகின்றனர். அந்த விசாரணையில் நிறைய விஷியன்கள் தெரியவந்துள்ளது. இதில் இவர் கூறியதில் அவருக்கும் போதைப்பொருள் உபயோகம் படுத்துபவர்களுக்கும் சம்மந்தம் உள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக்சக்ரவர்த்தி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
மேலும் அந்த கூட்டத்துடன் தொடர்பில் இருந்த பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா, அலிகான், சிரத்தாகபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியது. முன்னதாக ரகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரகுல்பிரீத்சிங் விசாரணைக்காக ஆஜரானார். அந்த விசாரணையில் அவர் அவரிடம் இருக்கும் போதை பொருள் ரியா தான் அவருக்கு கொடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் தனது வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது என்றும் கூறியுள்ளார்.




