வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரை துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளது.

வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அமைந்துள்ளது. நேற்று இரவு 10 மணிவரை இந்த கடை செயல்பட்டிருக்கிறது. இரவுநேர காவலர்களும் பணியில் இருந்ததால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலைக்குள் இந்த திருட்டுச் சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நகைக்கடையின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை திருடிச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




