சச்சின் ஒன்பது பவுண்டரிகளையும் ஐந்து சிக்ஸர்களையும் அடித்து நொறுக்கினார், ஷேன் வார்ன், டேமியன் ஃப்ளெமிங் மற்றும் மைக்கேல் காஸ்ப்ரோவிச் போன்றவர்கள் எதிரில் அவரது ஆட்டம் அனல் பறந்தது
ஒரு காட்டு மணல் புயல் மைதானத்தின் வழியாக வீசியதால், 25 நிமிடங்களுக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் வெற்றி இலக்கை 50 ஓவர்களில் 285 லிருந்து 46 ஓவர்களில் 277 என்று குறைத்தது.
மாஸ்டர் பிளாஸ்டர் முழு சக்தியுடன் வந்து 131 பந்துகளில் 143 ரன்கள் எடுத்தார். சச்சின் ஒன்பது பவுண்டரிகளையும் ஐந்து சிக்ஸர்களையும் அடித்து நொறுக்கினார், ஷேன் வார்ன், டேமியன் ஃப்ளெமிங் மற்றும் மைக்கேல் காஸ்ப்ரோவிச் போன்றவர்கள் எதிரில் அவரது ஆட்டம் அனல் பறந்தது
1998 ஷார்ஜா வில் நடைபெற்ற இந்தத் தொடர் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக உலகின் மிகப் பெரிய பேட்ஸ்மேன் ஆடியதால், சச்சின் டெண்டுல்கர் Vs ஷேன் வார்ன் ஆட்டம் என்றே அழைக்கப்பட்டது.
1998 ஷார்ஜா வில் நடைபெற்ற இந்தத் தொடர் டெண்டுல்கர் 143 ரன்கள் எடுத்து ஆஸியை வீழ்த்தி, கோகோ கோலா கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவைத் தகுதி பெறச் செய்தார். இது தற்செயலாக நடந்தது இல்லை என்று நிரூபிப்பதை போல, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் 134 ரன்கள் எடுத்து ஆஸி அணியை வீழ்த்தினார்.
அந்தத் தொடர் சச்சினின் ‘பாலைவன புயல்’ என்று அன்பாக நினைவுகூரப்படுகிறது.
“அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள், அவர்கள் எனக்காக வேண்டினார்கள். எதற்காக? சச்சின் வெளியேறக்கூடாது, நான் ஆட வேண்டும்”என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.