தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறைத் தரப்பில் சமீபத்தில் தகவல் வெளியானது.
கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நிலையில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. கல்வி ஆண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க சாத்தியமில்லாத சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறந்தால் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை பள்ளிகளைத் திறக்க முடியாது என கூறியுள்ளார்
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தற்போது அது குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.