செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை பழுதுபார்த்து மூட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி
‘நிவர்’ புயலை முன்னிட்டு – செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3ஆவது மதகுகள், மூட முடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.
அமைச்சர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏன் மதகுப் பராமரிப்பில் இப்படிக் கோட்டை விட்டார்? பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் செய்த பணிதான் என்ன?மதகுகள்
செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்று பார்த்த அவர், ஏன் இதுகுறித்தெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவில்லை? அரசின் இந்த அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் உள்ள ஏரி மதகுகளைப் பராமரிப்பதற்கென்றே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதன்படி அந்தப் பணிகள் நடப்பதில்லை. செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் நிலையே சாட்சி. சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரியைப் பராமரிப்பதிலேயே இவ்வளவு அலட்சியம் என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஏரிகளை இவர்கள் எந்த மாதிரி பராமரித்திருப்பார்கள்?
போர்க்கால நடவடிக்கை
எனவே, துறை அமைச்சர் என்ற முறையிலும், முதல்வர் என்ற முறையிலும் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீர் வீணாக வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், மதகுகளைச் சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.