டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து, எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
1.2003 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் , மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- மேலும் , தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறித்து 237.63 லட்சம் டன்கள் ஒன்றிய அரசினால் அதாவது , அனுப்பப்பட வேண்டிய நிலையில் , ஆண்டு ஒன்றுக்கு 171.10 லட்சம் டன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது . முழுமையாக நிலக்கரி வழங்கி உரிய அளவு மின்சாரத்தை பெறும் வகையில் ( Toling ) நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் .
- மேலும் , ஒரிசா மாநிலத்தில் , சந்திரபிலாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரி ஒதுக்கீடு பெறுவதற்கு 30.03.2016 அன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது . ஆனால் , 66 மாதங்கள் கழிந்தும் அங்கு இன்னும் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை . வனத்துறையினரின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது . ஆகவே , இதற்கான ஒப்பந்த காலத்தினை நீட்டித்து தர வேண்டும் .
- மேலும் , ஒன்றிய அரசின் நிதி நிதிநிறுவனங்களான PFC , REC , IREDA- இல் இருந்து பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 9.50 % முதல் 12.65 சதவீதமாக உள்ளது . இதனை ஒரே மாதிரியாக அனைத்து வகையான கடன்களுக்கும் 8.50 % விழுக்காடாக நிர்ணயம் செய்ய வேண்டும் .
- மேலும் , RAPDRP – Part -B- க்கு உண்டான அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டுவிட்டன . மேற்படி திட்டத்தில் Part -A- ல் உள்ள வேலைகள் ஒப்பந்ததாரர்களால் செய்து முடிக்காத காரணத்தாலும் , நீதிமன்ற வழக்கின் காரணமாகவும் முடிக்கப்படாமல் உள்ளது . இதன் காரணமாக பகுதி A- விற்கான மானியத்தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது . இது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி மேற்படி கடன்தொகையான ( அதாவது திட்டமதிப்பீட்டில் 50 % விழுக்காடு ) ரூ .1330.93 கோடியை மானியமாக மாற்றம் செய்து தர வேண்டும் .
6.மேலும் , மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ .8647 கோடியானது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லையாதலால் மானிய தொகையை ரூ .12,000 கோடியாக உயர்த்தி தர வேண்டும் .
- மேலும் , ஒன்றிய அரசின் மின்விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 7 பைசாவில் இருந்து 1 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்திட வேண்டும் .
- மேலும் , ரைகார் – புகளூர் – திருச்சூர் – உயர் மின்னழுத்த மின் வழிப்பாதை தேசிய முக்கியத்துவம் வழிப்பாதையாக கருதப்பட வேண்டியும் , மின் வாய்ந்த மின் வழிப்பாதையில் உள்ள அனைத்து பயனாளர்களும் பயனடையும் படியும் , நிதிச்சுமையை 720 கோடியில் இருந்து 216 கோடி வரை குறைத்து 504 கோடி சேமிப்பு செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- மேலும் , ஒன்றிய அரசின் மின் விநியோக கழகத்தின் மூலம் மின் கொள்முதல் செய்து வழங்க வேண்டிய மீதமுள்ள 1100 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
10.மேலும் , நிலுவையில் உள்ள ரூ .38.49 கோடி , ஒன்றிய அரசின் நிதி உதவியினை MNRE- இல் இருந்து TEDA- விற்கு உடனடியாக வழங்க வேண்டும் .
- மேலும் , மாநிலங்களுக்கு இடையேயான மின்பாதையை உபயோகப்படுத்த செலுத்த வேண்டிய தொகையில் உள்ள கணக்கீடு குறைவை நிவர்த்தி செய்து TANGEDCO- விற்கு மாதம் ஒன்றுக்கு 48 கோடி வரையில் கூடுதல் செலவு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- மேலும் , மின் கொள்முதலுக்கு உத்தரவாதமாக வங்கி உறுதி கடிதம் ( Letter of Credit ) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது . மேற்படி உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .