பிரபல சீரியல் நடிகை ஒருவர் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஹரிப்பிரியா .
இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் லட்சுமி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார்.
மேலும் ஹரிப்பிரியா கண்மணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில் ஹரிப்பிரியா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.