Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மூட நம்பிக்கையால் விபரீதம்… தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த சகோதரிகள்

October 9, 2021

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணம் செய்து கொள்ளாத தனது மகள்கள் ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என அறியப்படுகிறது. ஊருக்கு சற்று தொலைவில் இவர்களது வீடு இருந்ததால் ஊர் மக்களும் இவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலான நேரம் இவர்கள் ஜெபம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.

மூடநம்பிக்கையால் மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக நம்பி பெற்றோர்களே அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்

உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ : குவியும் பாராட்டுகள்

அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய்

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க இவர்களது உறவினர் ஒருவர் புதுச்சேரியில் இருந்து சொக்கம்பட்டிக்கு வந்து மேரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் இறந்து விட்டதும் அவரது சடலத்தை வீட்டினுள் கிடத்தி வைத்து மகள்கள் இருவரும் தங்களது தாயை உயிர்பிப்பதாகக் கூறி ஜெயம் செய்து வருவதையறிந்து அவர்களிடம் சமாதானம் பேசி அடக்கம் செய்ய கூறினார்.

ஆனால் அவரை சகோதரிகள் இருவரும் திட்டி வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வந்த அவர் ஊர் மக்கள் சிலரிடம் இதுகுறித்த தகவலை கூறிவிட்டு மீண்டும் புதுச்சேரி சென்று விட்டார். இது குறித்து ஊர்மக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

நேற்று இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவுகளை தட்டியபோதும் சகோதரிகள் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தனர். பின்னர் உள்ளே சென்றபோது, மேரியின் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

அவரது உடலில் பைபிள் ஒன்றை வைத்து ஜெபம் செய்துள்ளதும் தெரிந்தது. ஆனாலும் சகோதரிகள் தங்களது தாயார் உயிரோடு இருப்பதாகவும், அவரது உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் நீண்ட நேரமாக வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினரை வரவழைத்து மேரியை பரிசோதனை செய்தபோது அவர் உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவரது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சகோதரிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவரும் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து ஏழு நாட்கள் ஆகியிருக்கும் என தெரிவித்தார். ஆனாலும் மேரியின் மகள்கள் இருவரும் மருத்துவர் கூறியதையும் ஏற்க மறுத்து தங்களது தாய் இறக்கவில்லை, அவர் உயிருடன் வருவார் என கூறி மருத்துவ பணியாளர்களிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்த வண்ணம் இருந்தனர்.

பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரும் மேரி எவ்வாறு இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இரவு 9 மணிக்கு துவங்கி சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே சகோதரிகளிடமிருந்து அவர்களது தாயாரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையால் சகோதரிகள் தங்களது தாயாரின் உடலை வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அடக்கொடுமையே… ‘டாக்டர்’ பட ரிலீஸுக்காக வாழ்க்கையையே பணயம் வைத்த சிவகார்த்திகேயன்!

Next Post

பொது மக்களுக்கு இடையூறு வரக்கூடாது… அதிகாரிகளுக்கு முதல்வரிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!

Next Post

பொது மக்களுக்கு இடையூறு வரக்கூடாது... அதிகாரிகளுக்கு முதல்வரிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version