நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தில் ஐந்து நிமிட வீடியோ இணையதளங்களில் வைரலானது.
அதில் ரூ. 6000 பணத்தை வைத்துக்கொண்டு, ஏர்லைன் ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்னால் யாரும் நம்புவார்களா? என்று சூர்யா பேசும் டயலாக் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சமிபத்தில் ரிலீஸான தனது சைலன்ஸ் படத்தின் பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது ஒரு ரசிகர் சூரரைப் போற்று திரைப்படம் பார்த்து வீட்டீர்களா படம் எப்படி இருக்கிறது?’ என கேட்க அதற்கு மாதவன் ஒற்றைவரியில் ‘mindblowing’ எனக் கூறினார்.
இந்நிலையில், தற்போது சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் இப்படம் எப்படி உருவானது என்று இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சூர்யா,உள்ளிட்ட பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சூட்டிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.




