சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தாண்டு ஹிந்தியில் தயாராக உள்ளதாக கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் விமானப் பயணத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தமிழ் மொழியில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று.
இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு சமீபத்தில் தடையில்லாச் சான்று கிடைத்ததை அடுத்து, டிரைலர் சாதனை படைத்தது. வரும் நவம்பர் 12 அம் தேதி அமேசான் பிரைம் ஒடிடியில் இப்படம் ரிலீசாகிறது.

இந்நிலையில், கேப்டன் கோபிநாத் எழுதிய simply fly என்ற நூலினை தயாரிப்பாளர் சூனித் மோங்கா படித்ததாகவும் அதை சினிமாவாக எடுக்க விரும்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தாண்டு ஹிந்தியில் தயாராக உள்ளதாக கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.




