கொரோனா நோய் பரவல் காரணாமாக கடந்த 5 மாதமாக ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது மேலும் மாதம் தோறும் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது, அந்த வகையில் இந்த மாதம் முதல் பொது போக்குவரத்திற்க்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் 7-ம் தேதி முதல் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. சென்னையில் காலை 6.10க்கு புறப்பட்டு மதியம் 2.05 மணிக்கு கோவையை சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மேலும் கோவையில் இருந்து காலை 6.15க்கு மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். பின்னர் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணியளவில் மீண்டும் கோவையை சென்றுசேரும்.
சென்னை-கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
கோவை-மயிலாடுதுறை இடையே வியாழக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி, மதுரை, தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எழும்பூரிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.15 மணிக்கு மதுரையைச் சென்றடையும் என்றும் பின்னர் காலை 7 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.35 மணிக்கு எழும்பூரை வந்தடைய உள்ளது.
இதேபோல, இரவு 7.35 மணிக்கு எழும்பூரிலிருந்து கிளம்பும் ரயில், காலை 6.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும் எனவும் மறுமார்க்கத்தில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35-க்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
டிக்கெட் உறுதிசெய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதனால், முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான பெட்டி இருக்காது. ரயில் நிலையத்துக்குள் நுழையும்போதும், பயணத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். 90 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்துசேர வேண்டும் என கேட்டு கொள்ள பட்டுள்ளது.