சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல் 19) முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு சிறப்பு ரயிலானது தினமும் இரவு 10.40 மணிக்கு துவாரகா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நான்காவது நாள் காலை 10.30 மணிக்கு மதுரை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் ராஜ்கோட், சுரேந்திர நகர், அகமதாபாத், வதோரா, சூரத், நந்தர் பர், ஜல்கான், அகோலா, நன்டெட், காச்சி குடா, ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது..