ஓடிடி தளம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு கட்டுப்பாடு வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.
டெல்லி,
விஜயதசமி விழாவை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் விஜயதசமி நிகழ்ச்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் துவக்க விழா கொண்டப்பட்டது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன் பகவத் சேவகர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் நிறுவன தலைவர்கள் கேபி ஹெட்கேவார் மற்றும் எம்எஸ் கோல்வால்கரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் ஆர்.எஸ்.எஸ் சேவகர்களிடம் உரையாற்றிய மோகன் பகவத், நம் தலைவர்கள் கூறியது போல பல்வேறு கலாச்சாராதால் நம்முடைய பிரிவு விரிவடைந்து கொண்டே செல்கிறது; பிரிவினை என்பது சோகமான வரலாறு எனவும் அதனை நேர் நின்று எதிர்த்து அடுத்த தலைமுறைக்கு அதன் உண்மையை கொண்டு செல்ல வேண்டும். இதனால் மீண்டும் நம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கும் என்றார்.
திரைப்படங்களில் உள்ள காட்சிகளுக்கு தணிக்கை உண்டு! ஆனால் ஓடிடி தளங்களில் வரும் படங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை!! ஏன் இன்றைய காலத்தில் குழந்தைகளின் கையிலும் தான் செல்போன் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சமூகத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது? அதன் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக பேசிய மோகன் பகவத் ஓடிடி , போதை பொருள் கடத்தல் என அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இப்போதைய சூழலில் மக்கள் தொகை கொள்கை என்பது பெரும் பிரச்சனையாக உருமாறி வருகிறது; ஆகவே புதிய மக்கள் தொகை கொள்கையை அடுத்த 50 ஆண்டுகளை கணக்கில் வைத்து உருவாக்க வேண்டும் இதனால் மக்களிடையே ஏற்றத்தாழ்வு பிரச்சனை நீங்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் ஆப்கானை வசப்படுத்திய தலிபான்-கள் வரலாறு என்ன என்று எங்களுக்கு தெரியும்! நம் அண்டை நாடான சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இன்றுவரை தலிபான்களை ஆதரிக்கிறது. தலிபான்கள் தன் எண்ணத்தை மாற்றினாலும் பாகிஸ்தான் மாற்றி கொள்ளவில்லை!! எனவும் இந்தியா மீதான சீனாவின் நோக்கங்கள் மாறிவிட்டது என்பதால் நாம் நம் எல்லை பாதுகாப்பு படையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.