வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாக்க மின்வேலிகளின் விதி அறிவிக்கையை தமிழ்நாடு அரசானது வெளியிட்டு இருக்கிறது. இதன்படி சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட பல மின் வேலிகள் அமைக்களை முன் அனுமதி பெறுவது என்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் தற்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதிகள் எல்லாம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு செய்யப்பட்ட, காட்டின் வனப் பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள் எல்லாம், தங்களது வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர்களிடம் பதிவு செய்வது இனி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.