பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாம் மற்றும் 2ம் ஆண்டு பருவத்தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இறுதியாண்டு பருவத்தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வை நடத்த அனுமதி வழங்கியதுடன், தேர்வை எழுதாமல் பட்டங்களை வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது .மேலும் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து முதலாம், இரண்டாம் ஆண்டு பருவத்தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பல்கலைக்கழகங்கள் விரும்பினால், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பருவத்தேர்வுகளை நடத்தலாம் என்றும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தது.
மேலும் முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.