நீட் ,ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்க்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதைதொடர்ந்து, மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து, நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் என கருத்து தெரிவித்துள்ளது.