சுஷாந்த் சகோதரிகள் மீது ரியா சக்ரவர்த்தி புகார் அளித்ததை தொடர்ந்து மும்பை போலீசார் அவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

சுஷாந்த் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களின் விசாரணையில் சுஷாந்தின் குடும்பத்தாருக்கு துளியும் திருப்தியில்லை.
சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மீது அவரது குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் மும்பை போலீஸ் அதனை ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தங்களின் சொந்த ஊரான பீகாரில் அம்மாநில காவல் துறையில் புகார் அளித்த சுஷாந்தின் குடும்பத்தினர். இதனை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி மீது பீகார் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. விசாரணைக்காக மும்பை சென்ற பீகார் போலீஸ்க்கு மும்பை போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்காமல் விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் அவர் சுஷாந்துக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கொடுத்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர். ரியா சக்ரவர்த்தியின் வீட்டில் போதை பொருள் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் மேலாளர் சாமுவேல் மிராண்டா, சுஷாந்த் வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சுஷாந்த் பைபோலர் டிஸ் ஆர்டரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சுஷாந்த் கொண்டிருந்தார் என்றும், ஆனால் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தனது புகாரில் கூறியுள்ளார்.
மேலும் நான் கொடுத்த மருந்துகளை ஏற்காமல் அவரது சகோதரி கொடுத்த மருந்துகளைதான் சுஷாந்த் உட்கொண்டார் என்றும் ரியா தனது புகாரில் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து ஜூன் 8ஆம் தேதியான அன்றே தான் சுஷாந்தைவிட்டு பிரிந்ததாகவும் கூறியுள்ளார். ரியா சக்ரவர்த்தியின் புகாரை ஏற்ற போலீசார், ரியா புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் சுஷாந்தின் சகோதரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




